பேய்,பிசாசு பில்லி,சூனியம் இவைகள் தெரியும் ! இவைகளால் பாதிக்கப்படும் ஜாதகம் தெரியுமா !!?
பேய் என்பது ஒருவர் இறந்த பிறகு அவரின் ஆவி அல்லது எச்சம் இந்த உலகத்தில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் ஒரு மனித நம்பிக்கையாகும். “பேய்” என்ற சொல்லுக்குப் பின்வரும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன:
ஆவி/பிசாசு: இறந்தவர்களின் ஆவி உலவுவதாகக் கருதப்படும் அமானுஷ்ய நம்பிக்கை.
குணங்கள்:
தீமை, வெறி, காட்டுத்தன்மை அல்லது வேகம் (உதாரணமாக: பேய் மழை).
இலக்கியம்:
சங்க இலக்கியங்களில் பேய்கள் பற்றிய குறிப்புகளும், நாட்டுப்புறக் கதைகளில் பழிவாங்கும் பேய்கள் பற்றிய கதைகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
பேய்கள் உண்மையிலேயே இருக்கிறதா என்பது குறித்து அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அறிவியல் மற்றும் உளவியல் பார்வையில், பேய் பயம் அல்லது பேய் இருப்பது போன்ற உணர்வு என்பது மனித மூளையின் மாயத்தோற்றம் (Hallucination), மன அழுத்தம் அல்லது இருள் மற்றும் தனிமையால் ஏற்படும் பயத்தின் விளைவாகவே ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பேய் , பிசாசுகள் அவரவர் ஜாதகத்தின் படி பாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளதா அது எப்படி இருக்கும் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
லக்னம், சந்திரன் அல்லது 5ஆம் பாவத்தின் மீது ராகு – கேது கடுமையாக சம்பந்தப்படுதல்
8ஆம் பாவத்தில் ராகு, கேதுவுடன் சனி, செவ்வாய் சேர்ந்து இருப்பது
சந்திரன் பாப கிரகங்களால் சூழப்பட்டு பலமின்றி இருப்பது.
லக்னாதிபதி 6, 8, 12ஆம் பாவங்களில் பாப சம்பந்தம் பெறுவது.
ராகு + சந்திரன் சேர்க்கை (கிரகண தோஷம்)
கேது + சந்திரன் சேர்க்கை காரணமாக மனஅமைதி பாதிப்பு ஏற்படும் அமைப்பு.
8ஆம் பாவம் மற்றும் 12ஆம் பாவம் அதிகமாக பாதிக்கப்படுதல்.
சனி, ராகு, கேது ஆகியவை மனதின்
ஸ்தானமான 4ஆம் பாவத்தை பாதிப்பது.
5ஆம் பாவத்தில் கேது இருந்து மன குழப்பம் தரும் அமைப்பு.
லக்னம் அல்லது சந்திரனுக்கு எதிராக ராகு/கேது அச்சு பலமாக இருப்பது.
பலமில்லாத சந்திரன் அமாவாசை அல்லது கிரகண நிலை பெறுவது.
8ஆம் அதிபதி மற்றும் ராகு இணைப்பு ஏற்படுவது.
மேற்பட்ட கிரக அமைப்புகள், விதிகளுக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டது.