மத்திய அரசின் அந்தியோதயா அன்ன போஜனா திட்டம் ! புதிய நடைமுறை என்ன !!?
மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா (Antyodaya Anna Yojana – AAY) திட்டம் , நாட்டின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
தற்போதைய நடைமுறை
AAY திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ உணவு தானியம் அரிசி அல்லது கோதுமை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய நடைமுறை.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு 7 கிலோ என்ற விகிதத்தில் வழங்கப்படும். உதாரணமாக ஒரு குடும்பத்தில் மூன்று நபர்கள் இருந்தால் 3×7=21 கிலோ மட்டும் வழங்கப்படும். 5 நபர்கள் இருந்தால் 35 கிலோ வழங்கப்படும் எனினும் ஐந்து நபர்களுக்கு மேல் இருந்தாலும் அதிகபட்சமாக 35 கிலோ மட்டுமே வழங்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் 2013ல் தற்போது மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் படி, நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள குடும்பங்களில் நியாய விலைக் கடை மூலமாக வழங்கப்படும் உணவு தானியத்தின் அளவு குறையும்.