சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் ! கல்லாக்கட்டும் பாலசுப்பிரமணி !!

by ஆசிரியர்
Reading Mode

சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் கல்லாக்கட்டும் பாலசுப்ரமணி.

ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவாரா விஜய். தமிழக முதல்வரின் தனி கவனத்திற்கு…

பதிவாளர் பாலசுப்பிரமணியம்.

பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சத்தம் இல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட சார்பதிவாளர்கள் மட்டும் இச்சோதனைகள் குறித்து முன்னதாக தகவல் தெரிந்து தப்பித்தனர். 

திமுக ஆட்சி காலத்திலும், அதற்கு முன்பும் பல ஆண்டுகளாக பத்திரப் பதிவுத்துறையில் கோலோச்சியவர் பாலசுப்ரமணியம். தமிழகத்தில் பல மாவட்டங்களில், மாவட்டப்பதிவாளராக பணியாற்றிய இவர், மூர்த்திக்கு வசூல் செய்து தருவதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். பல கோடிகளுக்கு அதிபதி.எந்த ஊரிலும் பத்திரப்பதிவு செய்யலாம்;

ஒரு சார் – பதிவாளர் நியமனத்துக்கு 50 லட்சம் ரூபாய் வரை வாங்கி அமைச்சருக்கு கொடுத்து விட்டு, அந்த சார் பதிவாளரை தான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இவர் சொல்லும் சொத்துப் பத்திரங்களையெல்லாம் அந்த சார் பதிவாளர் செய்து தர வேண்டும். இதற்கு தனியாக பாலசுப்ரமணியம் வசூல் செய்து கொள்வார்.

பாலசுப்ரமணியம், சென்னை புறநகரில் சட்டசிக்கலில் உள்ள சொத்து விபரங்களை அருணிடம் கொடுப்பார். அருண் கொரட்டூர் விநாயகம் என்ற ரவுடியை வைத்து அந்த இடத்தை possession எடுத்து, GTM @ கவுதம் மூலமாக பத்திரப் பதிவு செய்வார். இதன் மூலம் கிடைக்கும் பணம், ஹவாலா மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படும். இதைத்தான் அருண் மே 2023 முதல் ஏப்ரல் 2026 வரை செய்து வந்தார்.தலைமைச் செயலகத்தில் IT, ED… எதிர்க்கட்சித் தலைவராக… முதல்வராக… ஸ்டாலின் அன்றும் இன்றும்!

புதிய ஆட்சி வந்ததும், பத்திரபதிவுத்துறை ஐஜி அருண், சுந்தர், தயாளன் செய்த முதல் வேலை, இந்த பாலசுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்ததே.

இந்த பாலசுப்ரமணியத்திடம்தான், “அதிரடி சோதனைகள்” பற்றிய தகவலை சொல்லி, பாலசுப்ரமணியம் அவருக்கு வேண்டிய சார் பதிவாளர்களை அலர்ட் செய்து காப்பாற்றினார்.

உளவுத்துறை மூலமாக முதல்வர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அருண் ஐபிஎஸ் மற்றும் பாலசுப்ரமணியம் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்

எழிலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றும் அருணகிரி இவர் டெபிட்டேஷன் என்ற பெயரில் பத்திரப்பதிவுத்துறைக்கு பணி மாறுதல் செய்து வந்து விட்டார். ஆனால் இவர் புதிதாக வந்துள்ள அமைச்சரிடம் நான் தான் உங்களுக்கு பிஆர்ஓ என்று சொல்லி எல்லா அதிகாரிகள் மத்தியிலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அமைச்சரையே ஏமாற்றி தனது ஊழலை தொடங்கிவிட்டார்.

இவர் எழிலகத்தில் வேலை பார்ப்பவர்.
இவர் ஏற்கனவே பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தியிடமும் இவர் தான் கொடுக்கல், வாங்கல், கட்டிங், செட்டிங் போன்ற எல்லா வேலைகளையும் செய்து வந்தார் இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

எனவே இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் இவர் கடந்த காலத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு எவ்வளவு கோடிகள் வாங்கிக் கொடுத்தார் என்கிற விவரங்களை சேகரித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இவரது சொத்துக்களையும் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகளின் சொத்துக்களையும் ஆய்வு செய்து அவைகளை முடக்க வேண்டும் என்கின்றனர்.
தவெக ஆட்சியில் உள்ள சில நேர்மையான அதிகாரிகள்.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பெயர் சொல்லி ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து ஊழல் இல்லாத பத்திரப் பதிவுத்துறையை முதலமைச்சர் விஜய் உருவாக்க வேண்டும் என்கின்றனர் தவெகழக நிர்வாகிகள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00