நீ மகிழ்ச்சியாக இருப்பதற்காக என் உறவிலிருந்து வெளியேறுகிறாய்…
இதில் எந்த தவறும் இல்லை நீ தைரியமாக போகலாம் நீ இப்போது எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்கிறாய்…
ஆனால் இடையில் நீ என்னை தேர்வு செய்தது மட்டும்தான் நீ விட்ட தவறு…
நாம் தொடர்ந்து இருப்பதற்கு விதியில் இடம் இருக்கவில்லை என்று பழி போட வேண்டாம்…
நீ எல்லாவற்றையும் அடைவதற்கு உனக்கு உரிமை இருக்கிறது கிளம்பு…
நீ என்னிடம் மன்னிப்பு கேட்பதற்கு கூட எதுவும் இல்லை நீ உனக்கு முக்கியம் என்று நினைப்பதற்கு முன்னுரிமை கொடு…
நான் உன்னிடம் கோபம் காட்டிக்கொண்டே இருப்பதற்கு…
நீ பரம்பரை எதிரியோ ஜென்ம விரோதியோ இல்லை…
காயம் கொடுப்பவர்களை நேசிக்கிற பழக்கம் எனக்கு இருக்கிறது…
ஆனால் விலகிப் போபவர்களை பிடித்து வைக்கிற மனோபாவம் எனக்கு கிடையவே கிடையாது…
தொடங்கும்போது அது எப்போது முடியும் என்று எல்லாவற்றுக்கும் சொல்ல முடியாது…
ஆனால் சிலவற்றை தொடங்கும் போதே அதன் முடிவு தெரிந்துவிடும்…
நினைவில் கொள் எவ்வளவோ கொடுத்த உன்னை என்னால் மறப்பது கடினம்…
ஆனால் நீ எவ்வளவோ செயல்படுத்த வேண்டி இருக்கிறது அதனால் என்னை மறந்து விடுவாய்…

உன் சூழ்நிலையும் உன் பக்க நியாயமும்…
உன் முடிவுக்கு சரியானதாக இருந்திருக்கலாம்.
ஆனால் நான் அதிகமாக அன்று கொடுத்தேன் அதிகமாக திரும்ப வலியை வாங்கினேன்…
உணர்வு வெவ்வேறாக இருந்தாலும் நீ அளவை சரியாகத்தானே திருப்பித் தந்தாய்…
நீ இருக்கும் நம்பிக்கையில் நான் எல்லாவற்றையும் இழந்தேன்…
இப்போது அந்த நம்பிக்கையையும் இழந்து விட்டேன் அவ்வளவுதான்…
என் உணர்வுகளை நான் இப்போது எனக்குள்ளே வைத்திருப்பதற்கு காரணம்…
நீ புரிந்து கொள்வதற்கு அவசியமே இல்லை…
நீ விடை பெறுவதற்கு முன் என் இதயத்தை என்னிடம் கொடுத்து விட்டுப் போ…
மிக்க நன்றி!
வரிகள் / வலிகள்
நங்கூரம் நாகராஜ்