கவலை!!!!

by ஆசிரியர்
Reading Mode

🌸 கவலை

மனிதனுக்கு வருவது
இரண்டு கவலைகள் தான்…

முதல் கவலை –
“அடுத்தவன் என்னை பற்றி
என்ன நினைப்பானோ?” என்ற பயம்.
அந்த பயம்,
பிடிக்கவே முடியாத நிழல் போல எப்போதும் நம்மோடு தொடர்ந்தே வரும்.
நம்மை நாமே மறந்தாலும்,
அந்த நிழல் மட்டும் நம்மை விடுவதில்லை.

இரண்டாவது கவலை –
“நான் ஆசைப்பட்ட மாதிரி தான்
அடுத்தவன் இருக்கணும்” என்ற ஏக்கம்.
இந்த ஆசை,
கையில் பிடித்த பட்டம் மாதிரி.
காற்று எத்திசை நோக்கி செல்கிறதோ அத்திசை நோக்கியே செல்லும்.
ஆனால் நூல் மட்டும் நம் கையை வருத்தி வலியை கொடுத்துக் கொண்டே இருக்கும்…

இந்த இரண்டு கவலைகளையும்
தூக்கி எறிந்துவிட்டால்…
உலகமே சுமையில்லாமல் தெரியும்,
வாழ்க்கையே இதமான தென்றல் காற்று போல இனிமையாக இருக்கும்.

உலகம் உன்னைப் பற்றி அதிகம் நினைக்காது…
ஆகையால் நீயும் உலகத்தைப் பற்றி அதிகம் நினைக்காதே.
நீ சிரித்தால் கூட
அது உன் சிரிப்புக்கே உரியது,
நீ அழுதால் கூட
அது உன் கண்ணீருக்கே உரியது.

அடடா…
கவலைகள் குறையும் போது தான்
நெஞ்சுக்குள் இடம் பெருகும்.
அந்த இடத்தில் தான்
மகிழ்ச்சி வந்து குடியிருக்கும்.


உலகத்தைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்…
உன்னைப் பற்றியும் உலகம் கவலைப்படாது.
அந்த உண்மையை புரிந்துவிட்டவனுக்கு,
வாழ்க்கை ஒரு சிறகடிக்கும் பறவை போல்.                        

                       வலிகள் / வரிகள்       

                       ராஜவர்மன்

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00