உலக கடித தினம். எங்கே என் கடிதமே!!!?

by ஆசிரியர்
Reading Mode

உலக கடித தினம்.
எங்கே என் கடிதமே.!

இன்லாண்டே.. இன்லாண்டே.. வா..வா..
எனது கடிதம் பார்த்தவுடன் வா..வா..
பத்துக்காசு அஞ்சல் அட்டை வா..வா..
பார்த்து வெகு காலமாச்சு வா..வா..

சிகப்பு நிற பெட்டியிலே போடுவேன்… உன்னை சிலையாக நான் நினைத்துச் செதுக்குவேன்..என் காதலிக்கு கடிதமலர் தூதாக்குவேன்..உனை காணாததனால் இன்று நானோ துடிக்கிறேன்.!

அவசரமாய் தந்தி அன்று அனுப்பினேன்..தபால்காரர் வழியைப் பார்த்து நிற்கிறேன்.அம்மாவுக்கு காசு அனுப்பி வைக்கிறேன்..
நீ இல்லையென்றார்..
ஏனோ மனசில் தவிக்கிறேன்.!

காந்தி ,நேரு ,அறிஞர் அண்ணா இல்லை நான்!கவிதைகளை எழுதுகின்ற பாவலன் தான்..
அடுத்தடுத்த அறிவியலும் வளர்ந்ததே..
ஆசையுடன் கடிதம் எழுத
முடியலையே.!

ஸ்டாம்பு ,கவர், கார்டுகளை என் பேரன் பார்க்க பத்திரமாய் சேர்க்கிறேன்….
அந்தக்கால மனுஷனாக இருக்கிறேன்.!அதனால்தான் கடிதம் எழுத நினைக்கிறேன்.!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00