மனிதர்களின் அடுத்த தலைமுறைகள் மகிழ்ச்சியாக வாழ,மாபெரும் கூட்டம் அதில்,அரசு இயந்திரம் என்ன செய்ய வேண்டும்,என்கின்ற கேள்வியை அரசு இயந்திரம் இயங்குவதற்கான அச்சாணிகள் என்னிடம் என்னுடைய கருத்துக்களை கேட்டனர்!
புரட்சிக் கவிஞன் நான்
புயலெனப் புறப்பட்டேன்,
மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்றேன்,
சூதாட்டம் நடக்கக் கூடாது என்றேன்,
விபச்சாரம் அறவே கூடாது என்றேன்,
கல்வியை விலைக்கு விற்கக் கூடாது என்றேன்,
அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக வேண்டும் என்றேன்,
தடைகள் இல்லாமல் அடுத்த தலைமுறைகள் வாழ கல்வித் தகுதி,
தொழில் பயிற்சித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வேண்டும் என்றேன்!
விளை நிலங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றேன்,
அனைவரும் சிரித்தனர்?
இவை அனைத்தையும் நாங்கள் நடத்துவதால் தான்,
அரசு இயந்திரம் இயங்குகின்றது என்றார்கள்!
இறுதியாக ஒன்றைச் சொன்னார்கள்?
இவைகளை நாங்கள் தொடர்ந்து செய்வதற்காகத்தான்,
மக்கள் எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள் என்று!
நான் சிரிக்கின்றேன்?
என்னை நினைத்து?
பொது மனிதன்
இரா.இராஜா.