39
Reading Mode
அலைபேசியில்லாத நாட்களில்
அறிவிப்பில்லாமல் வரும்
விருந்தாளிகளுக்காக
சேர்ந்தே வேகும்
கைப்பிடி அரிசி!
ஊரின் கடைசி பேருந்தின்
வருகைக்காக தண்ணீர்
ஊற்றாமல் காத்துக் கிடக்கும்
சட்டியில் இருக்கும் சோறு
அன்று!
அலைபேசியின் உதவியால்
நடுநிசியிலும்
வீடு தேடி வருகிறது
பீட்சாவும் பர்கரும்
இன்று!
வழிப்போக்கர்களுக்கும்
தாராளமாய் கிடைத்தது
வீட்டில் இருந்த
நீராகாரம்
அன்று!
குடிக்கும் தண்ணீரையும்
விலை கொடுத்து வாங்கி
தாகம் தீர்க்கிறோம்
இன்று!
உயிர்ப்புகளோடும்
உறவுகளோடும்
உயிர் வாழ்ந்தோம்
அன்று!
இன்றும் உயிர் வாழ்கிறோம்
உயிர்ப்புகளுமின்றி
உறவுகளுமின்றி
ஜடமாய் ஜம்பமாய். .
Customize Text:
Font Color: