சிகரங்கள் தன்னம்பிக்கையூட்டும். ஆனால் பள்ளத்தாக்குகள் தான் உங்களைப் பக்குவபடுத்தும்.
காட்டுச் சிங்கமாக இருந்தாலும் படுத்து கிடக்காமல் ஓடினால் தான் பசிக்கு இரை கிடைக்கும்.
கட்டித் தங்கமாக இருந்தாலும் வெப்பம் தாங்கினால் தான் நகையாக மதிப்பு கிடைக்கும்,மனித வாழ்வும் இப்படி தான்.
கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதை விட அதனை ஒரு கை பார்(அனுபவி)த்து விடுவதே மேல்.
தைரியம்,மற்றும் நம்பிக்கை இருந்தால் அதன் முன் பணமும், படிப்பும் கூட தோற்று விடுகின்றன.
ஒரு சூழ்நிலையை பல கோணங்களில் இருந்தும் ஆராயுங்கள்,பல புதிய வழிகள் தோன்றும்.
விருப்பமும் நேசமும்
ஒன்றாகுவதில்லை.
விரும்பப்படும் எல்லாமே
நேசிக்கப் படுவதில்லை..
ஆனாலும்,
நேசிக்கப்படும் எல்லாமே
விரும்பப்படுகிறது.தேடி அலைந்து கொண்டே இருங்கள் வேண்டியது கிடைக்கும் வரை.
அது உங்கள் அருகில் இருந்தால் அதிர்ஷ்டம்.தூரத்தில் இருந்தால் நம்பிக்கை,கிடைக்காமல் போனால் அனுபவம்.
எப்போதும்
சுலபமானதைச் செய்வதை விட
சரியானதைச்
செய்வதே சரியானது.