கானாடுகாத்தான் ஐஓபி ஏடிஎம் இயங்காத அவல நிலை ! கண்டுகொள்ளாத வங்கித்துறை !! நடவடிக்கை எடுக்குமா மண்டல நிர்வாகத்துறை !!!?
கானாடுகாத்தான் ஐஓபி ஏடிஎம் 15 நாட்களாக பழுதடைந்த நிலையில், வாடிக்கையாளர்கள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க வங்கிப் பயனாளர்கள் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்ததால் வாடிக்கையாளர்கள் கடந்த 15 நாட்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பணம் எடுப்பதற்கும் பணம் இருப்புத் தொகையாக வைப்பதற்கும் ஒரே ஒரு ஏடிஎம் இயந்திரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது அது செயல்படாமல் உள்ளது.
இந்த ஏடிஎம் ஏற்பட்டுள்ள கழுதை செய்ய ஓரிரு தினங்கள் போதுமானது. சிறிய பிரச்சனை என்ற போதிலும் வங்கியின் கிளை மேலாளர் சுமார் 15 தினங்களுக்கு முன்பே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் காரைக்குடி மண்டல அலுவலக நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடனும், வருத்தத்துடனும் ஏடிஎம் முன் கடந்து செல்கின்றனர்.
இந்த கானாடுகாத்தான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை விரைந்து சரி செய்ய காரைக்குடி மண்டல மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.