சீரழிந்து வரும் காஞ்சாத்துமலை ! கண்டுகொள்ளாத வனத்துறை !! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு !!!?

by ஆசிரியர்
Reading Mode

சீரழிந்து வரும் காஞ்சாத்து மலை ! கண்டுகொள்ளாத வனத்துறை !! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு !!!?

காஞ்சாத்து மலை, திறந்தவெளி மதுகூடமாக மாறிவிட்ட அவல நிலை ! முன்னால் நீதிபதி உருக்கமான வேதனையோடு !!?

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் பறந்து விரிந்துள்ள காஞ்சாத்துமலை அரியவகை மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பகுதி ஆகும். ஆன்மீக ஸ்தலமாகவும் சித்தர்கள் தவம் செய்யும் இடமாகவும் வனவிலங்குகள் பாதுகாப்பாக வாழும் புகலிடமாகவும் திகழ்ந்து வந்தது ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை பாதுகாக்க தவறியதால் காஞ்சாத்துமலை திறந்தவெளி மது கூடமாகவும் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்யும் இடமாகவும் பாலியல் தொழில் அரங்கேறும் புகழ் இடமாகவும் மாறிவிட்டது மேலும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்த நிலை குறித்து பூலாங்குறிச்சியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் காவல்துறை மற்றும் வனத்துறையினரிடம் பல்வேறு மனுக்களை அழித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையோடு தெரிவித்துள்ளார். காஞ்சாத்து மலையை பாதுகாக்க கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தி மலைக்குச் செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சாத்து மலைக்கு வரும் ஆன்மீக பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தென்மண்டல ஐஜிக்கு மனு அனுப்பியும் ஆறு மாத காலமாக எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷமாக இருக்கிறது என்று முன்னாள் நீதிபதி செல்வம் அவர்கள் மனம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வனத்தில் காட்டு மாடுகள், காட்டுக்கோழிகள் மயில்கள்,முயல்கள், மான்கள்,பன்றிகள் இன்னும் பலவிதமான அரிய விலங்கினங்கள் இந்த வனத்தில் உள்ளது ஆனால் சில ஆண்டு காலமாக இந்த வனம் கேட்பாரற்று மது அருந்துபவர்களால் சாலைகள் அனைத்தும் பாட்டில்கள் உடைந்த நிலையிலும், பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கேன்களும் வனத்தில் போடுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு  உயிர் போகும் நிலையில் உள்ளது.

அழகான, ரம்யமிக்க இயற்கையான காஞ்சாத்து மலை மேல் முருகன் அருள்பாலித்து வரும் நிலையில், மலை அடிவார வனப்பகுதியில் சாராய அபிஷேகம் நடந்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாகவே உள்ளது. காஞ்சாத்து மலைக்கு நான்கு காவலர்களே உள்ளனர்.

இவ்வளவு பெரிய வனத்திற்கு இந்த நான்கு காவலர்கள் போதுமானதாக இல்லை . அதனால் இன்னும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பிற்கு நியமனம் செய்து இந்த வனத்தையும் வனத்தில் வாழும் மிருகங்களையும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

எனவே அரசு இதை கருத்தில் கொண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த வனத்தை காக்க வேண்டுமாய் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலை நீடித்துக் கொண்டே இருந்தால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00