ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற தீர்மானம் ! ட்ரம்புக்கு அதிர்ச்சி !! பின்னடைவு !!?

by ஆசிரியர்
Reading Mode

ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற தீர்மானம் ! ட்ரம்புக்கு அதிர்ச்சி !! பின்னடைவு !!?

அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஈரானுக்கு எதிராக தொடரப்பட்டு வரும் போரிலிருந்து அமெரிக்க படைகளை உடனடியாக திரும்பப் பெறக் கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை தொடங்கியிருந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இந்த முடிவு அவருக்கு கிடைத்த அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் 215க்கு 208 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேறியது. ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததன் மூலம் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது.

இருப்பினும் இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையாக கடந்து வந்தாலும் அதிபர் ட்ரம்ப் தனது வீட்டோ (veto) அதிகாரத்தை பயன்படுத்தி இதனை நிராகரிக்க முடியும்.

இதனால் இத்தீர்மானம் தற்போதைக்கு ஒரு குறியீட்டு ரீதியான அரசியல் அழுத்தமாகவே கருதப்படுகிறது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00