மஹா கும்பாபிஷேக விழா அழைப்பு.
ஆவிணிபட்டியில் மீனாட்சி சொக்கலிங்கம் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.
ஆவினிப்பட்டி நகரத்தார்களுக்குச் சொந்தமான அருள்மிகு சொக்கலிங்கம் மீனாட்சி திருக்கோயில் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆவிணிப்பட்டி கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு சொந்தமான அருள்மிகு சொக்கலிங்கம் உடனுறை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விஷ்வாவசு வருஷம், மாசி மாதம் 24ஆம் நாள் (08/03/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் ஸ்ரீ சொக்கலிங்கம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் பக்த கோடி பெருமக்கள், இறை அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னை மீனாட்சி சொக்கலிங்கம் அருள் பெற்று பதினாறு செல்வங்களும், நீண்ட ஆயுளும் பெற்று பேரானந்த வாழ்வு பெற மஹா தேவரையும் மீனாட்சி அம்மையையும் வேண்டி, அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி நிரல்:-
மாசி மாதம் 24ஆம் தேதி (08/03/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை ஆரம்பம், பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், லட்சுமி பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸா ஹூதி, திரவிய ஹோமம் நடைபெறும்.
காலை 10:15 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீப ஆராதனை, யாத்ரா தானம் நடைபெறும்.
காலை 10:30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெறும்.
காலை 11:00 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
பகல் 11:15 மணிக்கு மஹா தீப ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
பகல் 11:30 மணிக்கு மஹா அபிஷேகம் அதனை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
மாலை 6:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.
கும்பாபிஷேக பூஜைகள் அனைத்தும் சர்வ சாதகம், சிவாகம ரத்தினம், கயிலை புனிதர், சிவ ஸ்ரீ எஸ் ரவி குருக்கள் அரிமளம் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
யாகசாலை பூஜை நேரங்களில் வேத பாராயணம், திருமுறை பாராயணம், நாதஸ்வர இன்னிசையும் நடைபெறும்.விழாக்காலங்களில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உலகம் முழுவதும் இந்து மதத்தையும் இந்து மத ஆலயங்களையும் கட்டிக் காப்பாற்றி, இந்து மதம் தழைத்தோங்க அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. “மன்னர் பின்னோர்” என அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களின் பெரு முயற்சியால் தான் இந்து மத கோயில்கள் இன்னும் காப்பாற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்று வழிபாடு நடத்தி கொண்டிருக்கும் பெருமை நகரத்தார் பெருமக்களுக்கே உரியது என்பது யாராலும் மாற்ற இயலாதது.
வாழ்க நகரத்தார் சமூகம்!!
வளர்க நகரத்தார்களின் இறைப்பணி!! இவர்களின் இறைப்பணி மென்மேலும் சிறக்க நங்கூரம் மீடியா நெட்வொர்க் வாழ்த்துகிறது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்த பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுச்செல்ல அன்போடு வருக! வருக!! என அழைப்பது கருப்பையா விக்னேஷ் செட்டியார் என்ற ராஜவர்மன் ஷாலினி ஆவினிப்பட்டி.