பாவ கர்மங்கள் பறந்து ஓட வேண்டுமா ! இறைவனுக்கு இதைக் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் !!?
பஞ்சகவ்யம் என்றால் ஐந்து பொருள்கள்,
கிருதம் என்றால் ஔஷதம் என்கிற மருந்து.
பசும்பால்,
தயிர்,
நெய்,
கோசலம், சாணகம்,
இவைகள் ஐந்தையும் கூட்டி உண்டாக்கக் கூடியதுதான் பஞ்சகவ்ய கிருதம்.
பஞ்சகவ்ய அபிஷேகம் மஹா பாதக நாசனம்,
பஞ்சகவ்ய அபிஷேகந்து தேவ சான்னித்தய மேவேச! :
இதுதான் பஞ்சகவ்யம் மந்திரம்.

அதாவது!ஒரு தேவாலய க்ஷேத்ரத்தில் ஸ்திதி கொண்டிருக்கும் தேவனையோ,
தேவியையோ பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகங்கள் செய்வதை பார்த்தால் ஜனபக்த கோடிகளுக்குச் செய்த பாபகர்மங்கள் எல்லாமே நசித்து விடும்!
காரணம், பஞ்சகவ்யம் கொண்டு க்ஷேத்ர பூஜகன்மார்கள் ஸ்திதி கொண்டிருக்கும் தேவனை அபிஷேகிக்கும் போது, அந்த க்ஷேத்ர நாதனுக்கு தேவசைதன்யம் கூடுகின்றது.
கோமாதா என்கிற பசு தருகின்ற பஞ்சகவ்யம் தேவசான்னித்யம் கொண்டவையாகும், அது மிகவும் புனிதத்தன்மை கூடிய ஔஷதம் ஆகும்.
பசுவின் சாணகம், கோமியம், பால், தயிர்,நெய் இவையெல்லாம் சேர்த்துத்தான் பஞ்சகவ்ய கிருதம் உண்டாக்கப்படுகின்றது.
பஞ்சகவ்யத்தில் 108 தேவன்மார்களும் ஸ்திதி கொண்டுள்ளதாக விஸ்வசிக்கப்படுகின்றது.
இந்த பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
பசும்பால் ஆரோக்கியம் ஆயுள்பலம்
தயிர் சுக்கில விருத்தி,
நெய் மோக்ஷகதி,
கோமியம் தீட்டு நீக்கம்,
சாணகம் கிருமிநாசினி ஆகும்.

தேவாலய க்ஷேத்ர கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டிக்கப்படும் தேவ பிம்பகள், மிக்கவாறும் குளுமையான ஸ்திதியில் தான் இருக்கும்.
சூரியகதிர் ரஸ்மி படுவதில்லை,
இதனால் சிலைகளின் இடுக்குகளில், இடையே கிருமிகள், பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புண்டு.
அவைகளையெல்லாம் அழிக்ககூடிய சக்தி பஞ்சகவ்யத்திற்கு உண்டு
அதன்காரணமாகவே, பாரதீய ஆச்சார்யன்மார்கள் இதை கிருமிநாசினியாக உபயோகித்தனர்.
ஆகையினால் தான் ஒவ்வொரு தேவாலய க்ஷேத்ரங்களிலும் பஞ்சகவ்யம் அபிஷேகங்கள் நிர்ப்பந்தமாக உள்ளது.
விக்ரகங்களில் அபிஷேகங்கள் செய்யும் போது விக்ரகங்களின் ஆற்றல் சக்தி கூடிவருகின்றது ,என்பது நிருபீக்கபட்டுள்ளது.
பஞ்சகவ்யம் என்பது ஒரு தெய்வீக சைதன்யம் கொண்ட ஔஷதம் ஆகும்.மனுஷ்யன்மார்களின் சரீரத்தை சுத்தி செய்வது சுத்த நீர்,அதே நேரத்தில் மனுஷ்யன்மார்களின் சரி அகத்தினை சுத்தம் செய்வது பஞ்சகவ்யம் தான்!எனவேதான் பாரதீய சனாதன சடங்குகளில் பஞ்சகவ்யம் முக்கிய காரணமாகின்றது.
பசுக்கள் பலவிதமான நிறத்தை கொண்டதாகும்,
ஒவ்வொரு நிறம் கொண்ட பசுவிற்கும் அவைகள் கொடுக்க கூடிய பாலுக்கும் வித்தியாசம் வேறுபாடுகள் உண்டு.
பொன்னை நிறம் போல தோன்றகூடிய, பாலும்,
நீலநிறத்தில் உள்ள பசுவின் பாலிலிருந்து உண்டாக்ககூடிய தயிர்,
கருநிறம் கூடிய பசுவின் நெய்யும்,
சிகப்புநிற பசுவின் கோமியமும் ,
தனித் தனியாக எடுத்து பஞ்சகவ்யம் உண்டாக்கப்படுகின்றது.
சிவனின் அபிஷேக ஆராதனையில் பஞ்சகவ்யம் பெரும் பங்கு வகிக்கின்றது.
பசும்பாலில் சந்திரனும்,
பசுவின் தயிரில் வாயு பகவான்,
நெய்யில் குரு பகவான்
கோமியத்தில் வருண பகவான்,
சாணகத்தில் அக்னிபகவான், சூரியபகவான் போன்றோர்கள் வாசம் செய்கின்றார்கள்.

பசுவின் பால் ஐந்துபங்கு,
பசுவின் தயிர் மூன்றுபங்கு,
நெய் இரண்டு பங்கு, கோமியம் ஒருபங்கு.
சாணகம் ஒருகையின் பெருவிரல் அளவிற்கு,போன்றவற்றை சேர்த்துத்தான் பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும் என்று வைத்திய சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மனுஷ்யன்மார்கள் பஞ்சகவ்யத்தை உள்கொள்வதால் நாள்பட்ட வியாதிகளை தீர்க்ககூடிய வீர்ய சக்தி இதற்கு உண்டு!
பார் போற்றும் பஞ்சகவ்யத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து நாமும் பயன்படுத்தி சிறப்புடன் வாழ்வோமாக!