மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு – பொது தரிசனம் எப்போது?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு செப்டம்பர் 17 காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் நடைபெற்றது.
குடமுழுக்கு நிறைவடைந்ததும் காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய கோயில் மற்றும் சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வகையில் 7 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை கட்டணமின்றி பொது தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடமுழுக்கு நிகழ்வைக் காண மாநகரில் 53 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலைச் சுற்றியுள்ள பழமையான கட்டடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்கள் அங்கு ஏறி குடமுழுக்கைப் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர்.