சிவகங்கை எஸ்.எஸ்.கோட்டையில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் !
20 ஜோடி காளைகள் பங்கேற்பு !!?
சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல்லில் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மேலும் காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பெரிய காளைகள் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும். சிறிய காளைகள் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து ஒன்றை ஒன்று முந்தி சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது .இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு இந்த கவுரவிக்கப்பட்டனர் எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.