6
Reading Mode
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகமாகுமா!?
நாடு முழுவதும் பணப் புழக்கத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாட்னா மற்றும் மும்பையில் நடைபெற்ற RBI வாரியக் கூட்டங்களில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பும் ஆய்வு செய்யப்பட்ட இந்த திட்டம் தற்போது மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
அதிக நீடித்த தன்மை, நீண்ட கால செலவுக் குறைப்பு,
கள்ளநோட்டுகளைத் தடுக்க மேம்பட்ட பாதுகாப்பு.ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்திய நாணய அமைப்பில் இது ஒரு முக்கிய நவீனமயமாக்கல் நடவடிக்கையாக அமையும்.
Customize Text:
Font Color: