டாஸ்மாக்கின் ஒவ்வொரு நூறு ரூபாய் வணிகத்திலும் ஒரு குடும்பம் சின்னாபின்னம் ! இந்நிலை எப்போது மாறுமோ !??
அமுல் VS டாஸ்மாக் ஒரு ஒப்பீடு !அமுல் மற்றும் டாஸ்மாக் ஆகிய இரண்டும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள். அமுல் குஜராத் மாநில பால் உற்பத்தி பொதுத்துறை நிறுவனம் .டாஸ்மாக் தமிழ்நாட்டின் மது விநியோகம் செய்யும் பொதுப்பணி நிறுவனம் .
அமுல் நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்து சுமார் 55,000 கோடி ஆண்டுக்கு வருமானம் ஈட்டுகிறது . அதேபோல தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனம் மது வகைகளை தமிழக மக்களுக்கு மட்டும் விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 48000 கோடிக்கு வணிகம் செய்கிறது.அதேபோல தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனம் மது வகைகளை தமிழக மக்களுக்கு மட்டும் விற்பனை செய்து ஆண்டுக்கு சுமார் 48000 கோடிக்கு வணிகம் செய்கிறது.
டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி வணிகம் நடக்கிறது. இவ்வளவு பணம் யாரிடமிருந்து திரட்டப்படுகிறது என்றால் தமிழக மக்களை குடிகாரர்கள் ஆக்கி அவருடைய வாழ்வாதாரத்தை கெடுத்து அவர்களுடைய உடல் நலத்தை கெடுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது என்னும் நிலையில், இது ஆரோக்கியமான பொருளாதாரம் அல்ல .
ஆனால் அமுல் நிறுவனம் விவசாயிகளுக்கு மாடுகள் வாங்கி கொடுத்து விவசாயிகளை ஊக்குவித்து விவசாயிகளிடமிருந்து பால் வாங்கி அதை பால் பவுடர், ஐஸ்கிரீம், பனீர், தயிர், வெண்ணை என்று பல்வேறு உப பொருட்களாக பிரித்து மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அதோடு சொந்த மற்றும் வெளி மாநில மக்களுக்கும் விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் செய்யும் ஒரு ரூபாய் வணிகத்திலும் யாருக்கும் தீங்கு கிடையாது .ஆனால் டாஸ்மாக் நிறுவனம் செய்யும் ஒவ்வொரு நூறு ரூபாய் வணிகத்திலும் ஒரு குடும்பம் சின்னாபின்னம் ஆகிறது.திராவிடர்கள் மக்களை சிந்திக்க விடாமல் வைத்ததன் விளைவு இன்று டாஸ்மாக் சக்கை போடு போடுகிறது.
தமிழ்நாடு இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் போதைக்கு குடும்பங்கள் சீரழிந்த வண்ணம் உள்ளன.