ராகுவும், கேதுவும் இந்து ஜோதிடத்தில் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் பாம்பின் உடலும், மனித தலையும், மனித உடலும் கொண்ட நிழல் கிரகங்கள்.ராகுவை தலை என்றும்,கேதுவை வால் என்றும் குறிப்பிடுவார்கள்.புராணத்தின் படி, ராகு மற்றும் கேது இருவரும் அசுரர்களாக இருந்தவர்கள்.இவர்கள் அமிர்தம் அருந்தியதால், விஷ்ணுவால் தலை மற்றும் உடல் என பிரிக்கப்பட்டனர்,இவர்கள் நவக்கிரகங்களில் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள்.ராகுவின் செல்வாக்கின் கீழ் இருக்கும் நேரம் ராகுகாலம் என்று அழைக்கப்படுகிறது. கேதுவின் செல்வாக்கின் கீழ் இருக்கும் நேரம் எமகண்டம் என்று அழைக்கப்படுகிறது.இது பொதுவாக அசுபமாக கருதப்படுகிறது.
ராகுவோ அல்லது கேதுவோ உபயராசிகளில் ஒன்றில் இருந்து அவர்களுடன் 1-4-5-7-9-10- ஆகிய பாவக அதிபதிகளில் யாரேனும் ஒருவரோ அல்லது இருவரோ கூடி இருக்கும் இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு ராகுவின் தசையிலோ அல்லது கேதுவின் தசையிலோ செல்வ வளங்களோடு ஆற்றலும் வந்து சேரும்.
ராகு மற்றும் கேது இருவரும் 6-8-12- ஆம் அதிபதிகளுடன் கூடி இருப்பாரானால் ஜாதகருக்கு அவர்களால் நன்மை செய்ய இயலாது என்பதுடன் அவர்களின் தசா புத்தி காலங்களில் ஜாதகரின் தாய், தந்தைக்கோ அல்லது உறவினர்களுக்கோ மாரகம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை கொடுப்பார்கள்.