கடன் காலை சுற்றிய பாம்பாக யாருக்கு அமையும்? யார் கடன் வாங்கவே கூடாது? எந்தெந்த காலங்கள் கடன் ஏற்படும் ?

by ஆசிரியர்
Reading Mode

இன்றைய காலகட்டங்களில் தொழில் செய்பவர்கள் மற்றும் பலரும் அவரவர் தேவைக்கேற்ப கடன் வாங்குகின்றனர்.

அத்தியாவசியத்திற்கு கடன் வாங்கினால் கூட பரவாயில்லை.
ஆடம்பரத்திற்கு கடன் வாங்கினால தான் பிரச்சனை.

அம்பானியும் கடன் வாங்குகிறார். அதானியும் கடன்வாங்குகிறார்,ஆனால் அவர்கள் அதை திருப்பிச் செலுத்தி விடுகின்றனர்.????

இன்றைய காலகட்டங்களில் வங்கியே தனி நபருக்கு போன் செய்து லோன் வேணுமா என்று கேட்கும் நிலையில் உள்ளனர்.

நல்லவனின் நாணயத்தை பணத்தை திருப்பிக் கொடுப்பதில் அறியலாம் என்பார்கள்.

சரி,

இவ்வளவு இருந்தும், யார் கடன் வாங்காமல் வாழ்க்கையை ஒட்டவேண்டும் என்று இப்பதிவில் பார்ப்போம்.

ஒரு ஜாதகத்தில், லக்னத்திற்கு ஆறாமிடம் என்பது,ஒரு மனிதனுக்கு ஏற்படும் கடனைப் பற்றி குறிக்கும் இடமாகும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதியை விட,ஆறாம் அதிபதி வலுத்தால், கண்டிப்பாக கடன் உண்டு.

எந்த ஒரு ஜாதகத்திலும், ஆறாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால், கண்டிப்பாக கடன் உண்டு.

லக்னாதிபதி ஆறாம் அதிபதி சாரம் பெற்று , 6ஆம் அதிபதி திசை நடந்தாலும் நிச்சயமாக கடன் ஏற்படும்.

4.2ம் இடமும் ,11 ஆம் இடமும், குரு பகவானும் ஒருவருக்கு பணம் எந்த அளவு புழங்கும் என்பதை குறிக்கும்.
2, 11 குருவை விட,ஆறாம் அதிபதி வலுத்து இருந்தால்,கண்டிப்பாக கடன் வாங்கவே கூடாது.கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட நேரிடும்.

7 1/2, அஷ்டமசனி காலகட்டங்களில் தேவை இருந்தாலொழிய, கடன் வாங்கவே கூடாது.இத்துடன் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி தசையோ எட்டாம் அதிபதி திசையோ பாவ அமைப்பை பெற்ற,சனி,ராகு திசையோ நடந்தால் கடன் அதிகமாகிக் கொண்டே செல்லும்.இந்த கால கட்டங்களில், நீங்கள் யாருக்காவது ஜாமீன் கொடுத்தால், நீங்கள் தான் ஜாமீன் கட்ட வேண்டியது வரும்.

சில லக்னங்களுக்கு ஆறாம் அதிபதி மிகக்கடுமையான எதிரியாக வருவர்.

மிதுன லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியான செவ்வாய் கடுமையான கெடு பலனையும்,சிம்ம லக்னத்திற்கு சனி பகவான் அவரது திசையில் சொல்ல முடியாத துயரத்தையும், சுப தொடர்பு இன்றி வலுத்திருந்தால் , கண்டிப்பாக கொடுப்பார்.

துலா லக்னத்திற்கு,ஆறுக்குடைய
குருபகவான் கடனை கொடுக்கும் கிரகம் என்பதால்,குரு திசை நடந்தால் வைத்து பிளந்து விடுவார்.இதில் மிகுந்த கவனம் தேவை

குரு, தனத்தைக் கொடுக்கும் காரக கிரகம் என்று தப்பு கணக்கு போடக்கூடாது.

மீன லக்னத்திற்கு ஆறாம் இடமாகிய கடன் ஸ்தானத்தில், சூரியன் தன்னுடைய சொந்த நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் அமர்ந்து கூடவே ராகுவும் இருந்து, ராகு திசை நடந்தால் தாங்கமுடியா கடன் சுமை கண்டிப்பாக உண்டு.

இயற்கை பாவ கிரகங்களான சனி, செவ்வாய், சூரியன் ,தேய்பிறை சந்திரன் இவை நீசமடைந்து, ராகுவோடு ஏதேனும் ஒரு விதத்தில்
(பார்வை, சாரம்,இணைவு)
தொடர்பு கொள்ளும் பட்சத்தில், ராகு திசை நடந்தாலும்,கடுமையான பிரச்சனை கண்டிப்பாக உண்டு.

கால புருஷனுக்கு ஆறாம் பாவகம் கன்னி, கடனை குறிக்கும் பாவகம் என்பதால் , அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட இயற்கை பாவ கிரகங்கள் அமர்ந்து, புதன் திசை நடந்தாலும் கண்டிப்பாக கடன் உண்டு.சில நிலைகளில் அது அவை சுப கடனாகவும் இருக்கலாம்.( எப்படி இருந்தாலும் கண்டிப்பாக கடன் உண்டு)

சனி ஒரு ஜாதகத்தில் கடனுக்கு காரக கிரகம் என்பதால்,எந்த லக்னமாக இருந்தாலும், துலா லக்னத்திற்கு சனி யோகாதிபதியாகவே இருந்தாலும், சனி ,ஜாதகத்தில் ராகு, செவ்வாய் மற்றும் புதனோடு இணைந்திருக்கும் பட்சத்தில்,சனி திசை கண்டிப்பாக கடனை உருவாக்கிய தீரும்.அது சுப கடனாகவோ அல்லது அசுப கடனாகவோ கண்டிப்பாக இருக்கும்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் வாங்கும் சிறு கடன்,வட்டிக்கு வட்டியாக, குட்டி போட்டு பெருகும்.இந்த காலகட்டங்களில் கண்டிப்பாக கடன் வாங்க கூடாது.

கிரெடிட் கார்டு மோகம் இன்று அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது. வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல் , வலி இல்லாமல் ரத்தம் வந்துவிடும் இதை வாங்கி விட்டால். மேற்சொன்ன அமைப்பில் இருப்பவர்கள் கவனம்.

அடுத்தவர் வங்கிக் கடன் மூலமாக கார் வாங்குகிறார்,வீடு வாங்குகிறார் என்று ,உங்களுடைய ஜாதகம் பலம் தெரியாமல்,ஆழமறியாமல் காலை விடவேண்டாம். விட்டால் கண்ணீர் தான்.

அதுபோல் ஆறாம் இடம் ஆள் அடிமை ஸ்தானம் எனப்படும்.இந்த ஆறாமிடம் வலுவானவர்கள் ஒருவரை அண்டிப் பிழைக்கும் நிலையே ஏற்படும் என்பதால் , கடன் வாங்கினால் ,
ஒரு குறிப்பிட்ட தொகையே வருமானமாக வரும்,அடிமை வேலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக கடனை அடைக்க முடியாது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00