இலவச ஆதார் சேவைக்கு மாற்றுத்திறனாளி குழந்தையிடம் இசேவை மையத்தில் பணம் பறித்த விவகாரம் 22 நாட்களுக்கு பிறகு வழக்குப் பதிவு.
ஆதார் அப்டேட் செய்வதற்கு சட்டத்திற்கு புறம்பாக பணம் பறித்த இசேவை மைய உரிமையாளர் மீது வழக்கு பதிவு.
மாவட்ட பகுதிகளிலுள்ள நுகர்வோர் சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளி சங்க பிரநிதிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா ஆபீஸ் எதிரிலுள்ள செல்வநாயகி பொது இசேவை மையம் ஜெராக்ஸ் கடையில் மாற்றுத்திறனாளி குழந்தை (வயது- 10) குழந்தைக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்க ரூ.750 பணம் வலுக்கட்டாயமாக வாங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆதார் எடுக்காமல் அலைக்கழிப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் முகாமில் இலவச ஆதார் எடுத்த பிறகும்கூட பணத்தை திரும்ப தராமல் மாற்றுத்திறனாளி குழந்தையை அவமதிப்பு செய்து பணத்தை மோசடி செய்த செல்வநாயகி பொது இசேவை மையம் ஜெராக்ஸ் கடை மீது மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016இன் கீழ் வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ச்சியாக புகாரளித்திருந்த நிலையில் மேற்படி பிரச்சனைகள் தொடர்பாக அவிநாசி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.ராஜபிரவு அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் ஈ.பி.அ.சரவணன், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தந்தை, எதிர்தரப்பினர் கலந்து கொண்டனர்.
அப்போது மேற்படி புகார் தொடர்பாக செல்வநாயகி பொது இசேவை மையம் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் லோகநாதன் மீது வழக்கு (csr) பதியப்பட்டது.
அதில் மனுதாரர் ஈ.பி.அ.சரவணன் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவராக உள்ளதாகவும், அவிநாசி தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள செல்வநாயகி xerox & E Sevai மையம் நடத்தி வரும் எதிர்மனுதாரர் லோகநாதன் என்பவர் அவரது கடைக்கு வந்த புதுப்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மாற்று திறனாளி பெண் குழந்தை ஆதார் அடையாள அட்டை புதுபிக்க வேண்டி சென்றதாகவும், அவரிடம் மேற்படி எதிர்மனுதாரர் ஆதார் அட்டை புதுபித்து தருவதாக கூறி ரூ.750/- பெற்றுக்கொண்டு, ஆதார் அட்டை எடுத்து தராமல் காலம் கடத்தி அலைகழித்து வந்ததால் எதிர்மனுதார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் பதியப்பட்டுள்ளது.
இதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் துணைத்தலைவர் கணபதி, நிர்வாகிகள் சுரேஷ், காந்திமதி, சோபனா, தெற்கு சரஸ்வதி, முருகலட்சுமி, இராமசாமி, பாலாஜி,அர்ஜூனன், பல்லடம் சரஸ்வதி, ரஞ்சிதா, திருமுருகன், மூர்த்தி, ஜானகிராமன், சஞ்சய் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.