தென்காசி மாவட்டத்தில் காவு கேட்கும் கனிம வள லாரிகள் ! பீதியில் மக்கள் !!?தினம் ஒரு விபத்து நிச்சயம் ! அதிகாரிகள் ஏனோ அலட்சியம் !!
தென்காசி மாவட்டத்தில் புளியரை வழியாக கேரளா செல்லும் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது நிரந்தரமான ஒரு விஷயமாகி விட்டது.
பல மணி நேரமாக பொதுமக்கள் அந்த நெரிசலில் சிக்கி, குறித்த நேரத்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல முடியாமலும் அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு திருவனந்தபுரம் செல்ல முடியாமல் இன்னல் பட்டு வருகின்றனர்.
டன் கணக்கில் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு ஓய்வின்றி இரவு பகலாக கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதனால் தினசரி விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது .
ஆகவே இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் கனரக வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தடை செய்தது போல தென்காசி மாவட்ட நிர்வாகமும் காவல்துறை ஏன் தடை செய்ய மறுக்கிறது.?
குமரி மாவட்டம் தமிழகத்தில் தானே இருக்கிறது. அங்கு செயல்படுத்தப்படும் சட்டம் இங்கு ஏன் செயல்படுத்தப்பட படுவதில்லை.தென்காசி மாவட்ட மக்களின் உயிர்கள் அவ்வளவு மலிவானதா?
தென்காசி பகுதியில் வசிக்கும் மக்களும் கன்னியாகுமரி மாவட்ட மக்களை விட தரம் தாழ்ந்தவர்களா?
மக்களின் உயிர்களை விட கனிமவள வாகனம் கேரளா செல்வதற்கு தான் மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளிக்குமா?
இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த முடிவு எடுக்கவில்லை என்றால் தென்காசி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பொதுமக்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாக தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.