இராங்கியத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு ! காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு !!

by ஆசிரியர்
Reading Mode

இராங்கியத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு ! காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு !!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் ராங்கியம் அழகிய நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வைகாசி மாதம் மூன்றாம் நாள் (17/05/2026) ஞாயிற்றுக்கிழமை அமர்க்களமாக நடைபெற்றது.

இதில் 600க்கும் மேற்பட்ட மாடுகளும், 70க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்அருகே உள்ள இராங்கியம் பெரிய கண்மாயில் அழகிய நாச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகளும் 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த ஜல்லிகட்டுப் போட்டி 2சுற்றுகளாக நடைபெற்றது.வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வந்ததை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வீரர்கள் மாடுகளை அடக்கினர்.

இதில் பங்கேற்ற பல காளைகள் வெற்றியும் பெற்று வெற்றிக்கு உண்டான பரிசுகளை காளைகளின் உரிமையாளர்கள் பெற்றுச் சென்றனர்.

சில வீரர்கள் காளைகளை அடக்கி வெற்றி பெற்று அதற்கு உண்டான பரிசுகளையும் பெற்று பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை பார்வையாளர்கள் ரசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடிய காளைகளுக்கும் சில்வர் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டது.மேலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00