தமிழக போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் போதை பொருட்களை பறிமுதல் செய்து அதனை மொத்தமாக தீயிட்டு அழித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில் இன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 2,000 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 975 கிலோ கஞ்சா மூட்டைகள் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்ட நிலையில்,
விருதுநகர்,நெல்லை, மதுரை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ கஞ்சாவை மதுரை சரக DIG அபிநவ் குமார் , நெல்லை DIG சந்தோஷ் ஹாதிமணி, மதுரை எஸ்.பி அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களில் 15 கோடி மதிப்பிலான 3,000 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.