நடிகர் சிவகார்த்திகேயன் நெகழ்ச்சி!! திருச்செந்தூர் முருகனை இதற்காகவே தரிசனம் செய்தேன்!??
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்குள் சென்ற அவர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன்,
“நான் சினிமாவிற்கு வந்து இன்று 14 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதற்காக முருகனை தரிசிக்க வந்தேன். இந்த 14 ஆண்டுகளில் சினிமா வாழ்க்கை எனக்கு பல நல்லதையும், கெட்டதையும் கற்றுத் தந்துள்ளது.
ரசிகர்களின் ஆதரவு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்து வருகிறது.தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என தெரிவித்தார்.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமியை என் குடும்பத்துடன் தரிசனம் செய்ததில் எனக்கு ஆத்ம திருத்தியையும் பெரு மகிழ்ச்சியையும் கிடைதுள்ளது என்றார்.