சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு சிறந்தது துளசி இலை சாறு”
துளசி இலை சாறு தயாரிக்கும் முறை:
பசுமையான துளசி இலைகளை 10–15 எடுத்து நன்றாக கழுவவும்.
அவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
சிறிது தேன் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
காலை நேரத்தில் காலை உணவுக்கு முன் அருந்துவது சிறந்தது.
மருத்துவப் பயன்கள்:
சளி, இருமல்: தொண்டை வலி, சளி அடைப்பு, இருமல் குறையச் செய்கிறது.
மன அமைதி:
மன அழுத்தம், பதட்டம் குறைந்து தூக்கம் மேம்படும்.
காய்ச்சல்:
உடல் சூட்டை குறைத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மூச்சுக் கோளாறு: ஆஸ்துமா, சைனஸ், மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
உடல் நலம்: இரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
எச்சரிக்கை:-
அதிகமாக அருந்தினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். தினமும் ஒரு சிறிய கப் போதுமானது.