மூதேவியை முதுகிலும், லட்சுமியை முகத்திலும், குடி அமர்த்துங்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.!

by ஆசிரியர்
Reading Mode

நாம் தினம், தினம் குளிக்கிறோம். ஆனால். குளித்துவிட்டு எப்படி துடைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் பலரும் அறியாத விஷயமாகும். அப்படி குளித்துவிட்டு துடைத்துக் கொள்வது எப்படி என்று நம் சித்தர்கள் நமக்காக வழி வகுத்துக் கொடுத்து சென்றுள்ளார்கள் அதை நாம் பார்ப்போம்.மூதேவியை முதுகிலும், லட்சுமியை முகத்திலும் குடியமர்த்துங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழுங்கள், ஞானிகள் சொல்லிச் சென்றுள்ளார்கள்

குளிக்கும் போது எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக் கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை விட்டுக்கொள்ளவேண்டும்.துடைத்துக்கொள்ளும் போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்க வேண்டும்.

நாம் தினமும் குளிக்கும் போது , மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் , வாசலில் காத்துகொண்டு நிற்கிறார்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நம் உடலில் வந்து அமர்வதற்கு,நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு விவாதம்

அந்த விவாதப்படி, அக்காதான் முதலில் சென்று உட்காரவேண்டும் என்கிறபடியால், நாம் குளித்து முடித்தவுடன், தலையை துவட்டிக்கொள்ளக்கூடாது.அப்படி துடைத்தால், அங்கு மூதேவி வந்து அமர்கிறபடியால் நம் புத்தி வேலை செய்யாது.

ஆகவே முதலில் முதுகை துடைக்க வேண்டும். அப்போது மூதேவி முதுகில் அமர்வாள்அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி அமர்வாள். நாம் சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்ப்பு கிடைக்கும்

முதலில் முகத்தை துடைத்து கொண்டால் மூதேவி அமர்வாள். நம்மை பார்த்தாலே பலருக்கு பிடிக்காது. இதுவே காரணமாகும். எனவே முதலில் முதுகை துடைத்து, பிறகு முகத்தை துடைத்து மகாலட்சுமி அம்சம் பெற்று வளமோடு வாழ்வோமாக!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00