உயிர் வாழ்தல் என்பதே நீரின் தொடர்ச்சி. மதகுடைத்த வெள்ளம் ஏன்?
எங்கள் மனமெல்லாம் உடைத்தது.. இருந்தும் இத்துயர இந்நிகழ்விற்கு இயற்கையே பொறுப்பு..
பணித் திட்டுகள் சட்டென உடைந்து , உயிர்த்திட்டுகளை ஏன் உடைத்தது.?
கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த இடமே ஏனோ உயிர் மட்டம் சரிய செய்தாய்…
இனமற்ற மொழியற்ற மாந்தர்களின் தேடல்களை நிமிடங்களில் நீர் சுருட்டிக் கொண்டதே..
பனிப்பாறைகளுக்கு தெரியாதா? உயிர் பாதைகளை அடைக்கக் கூடாது என்று..
தேடி வந்தவர்களை தேட வைப்பதா?இமயத்திற்கு அழகு.
இமயம் தேடி வந்த இடத்தில் இதென்ன ?இதய விரிசல்..
எல்லா பாதைகளுக்கும் நீரினால் எப்படி? முற்றுபுள்ளி வைக்க முடிகிறது?
இயற்கையை இப்போதும். எப்போதும்.. மேலென்று உன்னைத்தானே உணர்கிறோம் ..உயிரையும் உறவுகளையும் இழுந்து..
இரங்கல் பா எழுதி எங்கள் ஏக்கங்களை சொல்கிறோம் ..பெரும்.. இயற்கையே.. நீ உடனிருந்து உயிர் பிழைக்கச் செய்.
ஏதுமற்ற மாந்தர்கள் நாங்கள். எல்லாமும் நீயே..
பெரும் துயரத்துக்கு எங்கள் நங்கூரம் மீடியா நெட்வொர்க் வாயிலாக இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறோம்..
கவிஞர் ராஜவர்த்தனன்.