பாம்பு என்றால் படையும் நடுங்கும் ! வீட்டிற்குள் சாரைப்பாம்பு வந்தால் செல்வம் கொழிக்கும் !!?
சாரைப்பாம்பு வீட்டிற்கு வருவது என்பது இயற்கையான சூழலியல் நிகழ்வு, ஆன்மீக ரீதியாகவும், நடைமுறைச் சூழலிலும் இதற்கு சில பலன்கள் மற்றும் அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன.
நடைமுறை பலன்களாக,எலிகள் ஒழியும்: சாரை பாம்பு எலிகளை வேட்டையாடி உண்பவை. எனவே, வீட்டிற்குள் வரும் சாரை பாம்பு வீட்டில் உள்ள எலித் தொல்லையைக் குறைத்து, தானியங்களைப் பாதுகாக்கும்.
பிற விஷ பூச்சிகள் கட்டுப்பாடு, இவை மற்ற சிறு பூச்சிகள் மற்றும் சில விஷத்தன்மை கொண்ட பாம்புகளையும் (உணவாக) கட்டுப்படுத்த உதவுகின்றன.
சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, வீட்டிற்குள் வரும் சாரை பாம்பை அடிக்காமல் பாதுகாப்பாக வெளியேற்றினால் அது வீட்டிற்கு நன்மையும், செல்வ வரவையும் தரும் என்று கருதப்படுகிறது.
முன்னோர்களின் ஆசி அல்லது அவர்களின் வருகையாகவும் சிலர் இதை உணர்வுப் பூர்வமாகப் பார்க்கின்றனர்.
சாரை பாம்புகள் நச்சுத்தன்மையற்றவை என்றாலும், அவற்றைக் கையாள்வது கடினம். வீட்டிற்குள் பாம்பு வந்தால் அதை அடிக்க முயலாமல், கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைத்து அது தானாக வெளியேற வழி செய்ய வேண்டும்.
ஜோதிட ரீதியாக சாரைப்பாம்பு என்பது ரிஷப ராசி ரோகினி நட்சத்திரத்திற்குரிய குறியீடாக கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப ராசி என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு மற்றும் செல்வத்தை கொடுக்கும் தனஸ்தானமாகும்.
அப்படிப்பட்ட தனஸ்தானமாகிய ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தின் குறியீடாக சாரைப்பாம்பு வருவதால் இது வீட்டிற்குள் வருவது செல்வச் சேர்க்கையின் குறியீடாகவே கருதப்படுகிறது
ஆனால் இப்பாம்பை துன்பம் செய்யாமல் வீட்டிற்கு வெளியே அனுப்பி விட வேண்டும் இதுவே சாலச் சிறந்தது.