காலை எழும்போது கர தரிசனம் கண்டால் என்ன நடக்கும் தெரியுமா !!?
தினசரி காலை எழுந்த உடன் அவரவர் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை காணவும்.
உள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்.
உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் வந்து தங்கும் மையமாகும்.
இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும்.
உள்ளங்கையை குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதைத்தவிர மற்ற நேரங்களில், எந்த காரணம் கொண்டும் தலையில் கையை வைக்கக் கூடாது .

இப்படிச் செய்தால் நாம் பெற்றுள்ள கர்ம வினையினீ பாவங்கள் பெருகிவிடும். அந்த வினை நம்மை வீழ்ச்சி அடைய வைக்கும்.
எனவே உள்ளங்கையை தலையில் படும்படி சூரிய நமஸ்கார வேளை, குளியல் வேளை, எண்ணெய் தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் உள்ளங்கை தலையில் படவே கூடாது .
ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது.
பெண்களுக்கு சனிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது .
செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார வேளைக்கு பிறகு படக்கூடாது.
அதற்கு முன் படலாம். பொதுவாக உள்ளங்கை சூரிய உதயத்திற்கு முன் தலையில் பட்டால் தோஷமில்லை.
சூரிய உதயத்திற்கு பின் அவசியம், காரணமின்றி படாமல் பார்த்துக் கொள்ளவும்.
இரவில் உறங்கும்போது
கூட தலையில் கை வைக்காமல் தூங்குவதே சிறந்தது.
தலையில், கன்னத்தில், காதில் உள்ளங்கை வைத்து படுத்து உறங்கினால் என்ன நிலையில் உள்ளவர் ஆயினும் தரித்திரம் பிடித்து குடும்பத்தில் நிம்மதி கெடும் நிலை ஏற்பட்டே தீரும் என்பது திண்ணம்.
எனவே உள்ளங்கையை காலை எழுந்ததும் பார்த்து கண்ணில் வணக்கத்துடன் ஒற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு நமக்கு தேவையான நன்மை பயக்கக்கூடிய விஷயங்களை தொடர்ந்து செய்து வர மகா அதிஷ்டசாலியாக வருவீர். வாழ்வீர், வளர்வீர் வளமுடன்.