அஷ்டலட்சுமிகளின்   ஆன்மீக ரகசியம்  தெரியுமா??? அஷ்டலட்சுமியும் நம் உடலிலே இருப்பது  தெரியுமா???

by ஆசிரியர்
Reading Mode

அஷ்டலட்சுமிகளின் ஆன்மீக ரகசியம்  தெரியுமா??? அஷ்டலட்சுமியும் நம் உடலில் வசிக்கும் ரகசியம் தெரியுமா???

சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் தாயாராக விளங்குகிறாள் மகாலக்ஷ்மி தேவி. செல்வம், வளம், ஆரோக்கியம், அறிவு, தைரியம், வெற்றி என மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அருளும் தெய்வமாக அவளை பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

மகாலக்ஷ்மியை “அஷ்டலக்ஷ்மிகள்” என எட்டு வடிவங்களாக பாவித்து வழிபடுவது தொன்றுதொட்டு வந்த நம்பிக்கை. ஆனால் பெரும்பாலானோர் அறியாத ஒரு ஆழ்ந்த ஆன்மீக ரகசியம் என்னவென்றால் – இந்த அஷ்டலக்ஷ்மிகளும் நம் உடலிலேயே வாசம் செய்கிறார்கள் என்பதே!

நாம் செய்யும் செயல்கள், நடத்தை, எண்ணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த லக்ஷ்மிகள் நம்மிடம் தங்கவும் செய்யலாம் – விலகவும் செய்யலாம்.

அவை எங்கு வசிக்கிறார்கள்? அவர்களை எப்படிக் காக்கலாம்.

1.ஆதிலக்ஷ்மி – பாதங்களில் வசிப்பவள்

ஆதிலக்ஷ்மி நம் இரு பாதங்களிலும் குடிகொண்டிருக்கிறாள்.

கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருந்தபோது தனது கால் கட்டை விரலை வாயில் வைத்து சூப்பியதாக புராணங்கள் கூறுகின்றன. அது ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருவதாகக் கருதப்படுகிறது.

ஆதிலக்ஷ்மி விலகக் காரணங்கள்:

பிறரை கால் வைத்து அவமதித்தல் மது, மங்கை, சூதாட்டம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுதல்,பெரியவர்களை காலால் தொடுதல்.

பரிகாரம்:

காலை தரையில் வைக்கும் முன் “பூமாதேவி மன்னிக்க வேண்டும்” என்று மனதார நினைப்பது.
தாழ்மையான நடத்தை.நல்லொழுக்க வாழ்க்கை.

2.கஜலக்ஷ்மி – முழங்கால்களில் வசிப்பவள்

மனிதனின் முழங்கால்களில் கஜலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

விலகக் காரணங்கள்:

காலை நீட்டிக் கொண்டு உணவு உண்ணுதல்.காலை நீட்டிக் கொண்டு புத்தகம் படித்தல்.
அரிசி, தானியங்களை காலால் மிதித்தல்.
பசுவின் கால்களை கட்டி பால் கறப்பது போன்ற அவமரியாதை செயல்கள்.

பரிகாரம்:

பெரியவர்களின் முழங்கால்களை வலி தீர பிடித்து விடுதல்.தானியங்களுக்கு மரியாதை கொடுத்தல்.பணிவு குணம் வளர்த்தல்.
இதன் மூலம் கஜலக்ஷ்மி மீண்டும் நம்மிடம் குடியேறுவாள்.

3.வீர்யலக்ஷ்மி – இடுப்புக்குக் கீழ் பகுதியில் வசிப்பவள்

வீரம், ஆற்றல், மனவலிமை தரும் இந்த லக்ஷ்மி இடுப்புப் பகுதியில் வசிக்கிறாள்.

விலகக் காரணங்கள்:

சாதுக்களை, ஞானிகளை கேலி செய்தல்.குடுமி வைத்தவர்களை பரிகாசம் செய்தல்
பெரியோரை அவமதித்தல்.
இதனால் கல்வி, மனவலிமை, ஆற்றல் குறைந்து போகும் என்பது ஐதீகம்.

பரிகாரம்:

ஞானிகளுக்கு மரியாதை ஆன்மீகத்தை மதித்தல்.நல்ல சொற்களைப் பயன்படுத்துதல்.

4.விஜயலக்ஷ்மி – இடது தொடையில் வசிப்பவள்.

வெற்றியை தரும் தேவியான விஜயலக்ஷ்மி இடது தொடையில் குடிகொண்டிருக்கிறாள்.

விலகக் காரணம்:

தனது மனைவியை விட்டு பிறர் மனைவியை நாடுதல்.குடும்ப தர்மத்தை மீறுதல்.
மகாபாரதத்தில் துரியோதனன் திரௌபதியை அவமதித்ததால் விஜயலக்ஷ்மி அவனை விட்டு விலகினாள். அதன் விளைவாக அவன் அனைத்தையும் இழந்தான்.

பரிகாரம்:

குடும்பத்துக்கு விசுவாசமாக இருத்தல்.ஒழுக்கமான வாழ்க்கை

5.சந்தானலக்ஷ்மி – வலது தொடையில் வசிப்பவள்

குழந்தை பாக்கியத்தையும் குடும்ப வளத்தையும் தருபவள் சந்தானலக்ஷ்மி.

திருமணத்தில் பெண்ணை தானம் கொடுக்கும் போது அவளை வலது தொடையில் அமர்த்தி தானம் செய்வது மரபு.

தவறு நடந்தால்:

சந்தானலக்ஷ்மி விலகி விடுவாள்.
குடும்ப வாழ்வில் தடைகள் ஏற்படும்

பரிகாரம்:

திருமண சடங்குகளை முறையாக கடைபிடித்தல்.
தர்ம வழியில் வாழ்தல்.

6.தான்யலக்ஷ்மி – வயிற்றில் வசிப்பவள்

உணவு, தானியம், வாழ்வாதார வளத்திற்கு அதிபதி தான்யலக்ஷ்மி.

விலகக் காரணங்கள்:

எச்சில் உணவை ஏழைகளுக்கு வழங்குதல்.
கெட்டுப்போன உணவை தானம் செய்தல் பிறர் வயிற்றில் அடித்தல்.

பரிகாரம்:

ஏழைகளுக்கு நல்ல உணவு வழங்குதல்.
அன்னதானம் செய்தல்.உணவிற்கு மரியாதை கொடுத்தல்.

7.தைரியலக்ஷ்மி – நெஞ்சில் வசிப்பவள்

தைரியம், மனஉறுதி, நேர்மை ஆகியவற்றை அளிக்கும் தெய்வம்.

விலகக் காரணங்கள்:

பொய் பேசுதல்.புறம் பேசுதல்.கபட எண்ணங்கள் பெண்களின் மாங்கல்யம் நெஞ்சில் தவழ்வது. கணவரின் தைரியத்தை அதிகரிக்கும் எனும் ஆன்மீக நம்பிக்கையும் உள்ளது.

பரிகாரம்:

நேர்மையான வாழ்க்கை
உண்மையை மட்டுமே பேசுதல்.

8.வித்யாலக்ஷ்மி – கழுத்துப் பகுதியில் வசிப்பவள்.

கல்வி, அறிவு, ஞானத்தை அருளும் வித்யாலக்ஷ்மி நம் கழுத்துப் பகுதியில் வாசம் செய்கிறாள்.

விலகக் காரணம்:

ஆன்மீக ஒழுக்கங்களை பின்பற்றாமை.
ருத்ராக்ஷை போன்ற புனித பொருட்களை அவமதித்தல்

பரிகாரம்:

ருத்ராக்ஷை அணிதல், கல்விக்கு மரியாதை,நல்ல சொற்களைப் பேசுதல்.

அஷ்டலக்ஷ்மிகள் வெறும் கோயில்களில் மட்டும் இல்லை – நம் உடலிலேயே குடிகொண்டிருக்கிறார்கள்.

நம் நல்லொழுக்கம், பணிவு, உண்மை, தர்மம் ஆகியவற்றின் மூலம் அவர்களை நம்மிடம் நிலைத்திருக்கச் செய்யலாம்.

நாம் செய்யும் சிறு தவறுகளும் அவர்களை விலகச் செய்யும்.
நல்ல செயல்களே லக்ஷ்மி தேவியை நம்மிடம் நிரந்தரமாக தங்க வைக்கும்!.

வாழ்க பாரதம்! வாழ்க பாரதம்!! வளர்க இந்து மதம்!!! வளர்க இந்து மதம்!!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00