படம் எடுக்கும் பாம்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்?

by ஆசிரியர்
Reading Mode

வீட்டிற்குள் பாம்புகள் வராமல் இருக்க, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.குப்பைகள், புதர்கள் மற்றும் கற்களை அகற்ற வேண்டும். மேலும், சில வாசனை செடிகளை வீட்டைச் சுற்றி வளர்ப்பதன் மூலம் பாம்புகளைத் தடுக்கலாம். அவற்றை விரட்ட, பூண்டு, வெங்காயம் போன்ற வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தலாம். இதைவிட எளிமையான முறை ஒன்று உள்ளது. அதென்ன எளிமையான வழி, அதைப் பற்றி கீழே பார்ப்போம்

மழைக்காலம் தொடங்கியதும் பலரின் மனதிலும் எழும் ஒரே பயம், ‘எங்கே பாம்பு வீட்டுக்குள் வந்துவிடுமோ’ என்பதுதான்.கிராமங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் வீட்டுக்குள் பாம்பு வந்துவிடுமோ என்ற பயம் அதிகம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் பாம்புக்கு பயப்படத் தேவையில்லை. இனிமேல் பாம்பு பயமே உங்களுக்குத் தேவையில்லை. அதற்கு, இந்த ஒரே ஒரு பொருள் போதும். உங்கள் வீட்டு அருகில் ஒரு பாம்புகூட வராமல் தடுப்பதற்கு ஒரு எளிய ரகசியம் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை… ஒரு தேங்காய் ஓடுதான்!

தேங்காய் ஓட்டிற்குள் இருக்கும் ஒருவித தனித்துவமான வாசனை இருக்கிறது. அந்த வாசனையை மனிதர்களால் அவ்வளவு எளிதில் உணர முடியாது. ஆனால், பாம்புகளால் இந்த வாசனையை நுகர முடியும். அப்படி நுகர்ந்தவுடன், தேங்காய் ஓட்டிலிருந்து வரும் திசையில் செல்வதை அவை உடனடியாக நிறுத்திவிடுகின்றன. இந்த எளிய தந்திரம் உங்கள் வீட்டுக்குள் பாம்புகள் நுழைவதைத் தடுக்கிறது.

மழைக்காலம், வீட்டின் அருகில் உள்ள மரங்கள், செடிகள், தோட்டங்கள் என ஈரப்பதம் நிறைந்த எல்லா இடங்களும் பாம்புகளுக்குப் பிடித்துப்போகும். இந்த நேரத்தில், தேங்காய் ஓடுகளை அவற்றின் பயணப் பாதையில் வைத்தால் போதும்.முதலில், ஒரு காய்ந்த தேங்காயை எடுத்து, அதன் மேல் உள்ள நார் மற்றும் ஓட்டைப் பிரிக்கவும்.உள்ளே இருக்கும் தேங்காயை 3-4 துண்டுகளாக வெட்டி, தேங்காய்ப் பூ நீக்கிய ஓடுகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

இந்த ஓடுகளை உங்கள் வீட்டு வாசல் கதவின் இருபுறங்களிலும், தோட்டத்தின் பாதையில், ஜன்னல் அருகே என பாம்புகள் வர வாய்ப்புள்ள இடங்களில் வைக்கவும்.இந்த வாசனையின் தாக்கம் குறையாமல் இருக்க, ஒவ்வொரு 7-10 நாட்களுக்கு ஒருமுறை புதிய ஓடுகளை மாற்றவும்.மழை காரணமாக ஓடுகள் நனைந்து விட்டால், உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு, காய்ந்த ஓடுகளை வைக்கவும்.

தேங்காய் ஓடு பலன் அளிக்குமா?

வீட்டுக்குள் பாம்புகள் வராமல் தடுப்பதற்கு தேங்காய் ஓடு பலன் அளிக்குமா என்றால், நிச்சயமாக பலன் அளிக்கும். பல தலைமுறைகளாக கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ரகசியம் இது. எந்தவித ரசாயனப் பொருட்களும் இல்லாமல், இந்த எளிய வழியைப் பின்பற்றி மக்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். உங்கள் வீட்டிலும் அதிக செடிகள், மரங்கள், திறந்தவெளிகள் இருந்தால், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் ஓட்டினை பயன்படுத்தி படம் எடுத்து சீறிவரும் பாம்புகளை வராமல் தடுத்து நாமும் பாதுகாப்பாக இருப்போம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00