62
Reading Mode
Reading Mode
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கால்பந்து மைதான கோல் போஸ்டுக்கு பின்பகுதி, ஓடுதளத்திற்கு வெளிப்புறங்களில் புற்கள் இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
விளையாட்டு அரங்கங்கத்தை பொறுத்தமட்டில் ஆள் நடமாட்டம் குறைந்தாலும், மாலையில் இருட்டும் வேளையில் பாம்பு நடமாட்டத்தை காணமுடியும். அப்படி இருக்க, கால்பந்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள் அடிக்கும் பந்து கோல் போஸ்டுக்கு வெளியில் உள்ள புதரில் தான் பெரும்பாலும் விழுகிறது.
அந்த புதரில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால் வெளியே தெரிவதில்லை. அதனால், இவ்வளவு உயரத்திற்கு புற்கள் வளர விடுவது பயிற்சி மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் புற்களை உடனுக்குடன் காலதாமதமின்றி வெட்டுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Customize Text:
Font Color: