3
Reading Mode
பாலியல் தொந்தரவு ! இளம் பெண் மரணம் !! தவெக நிர்வாகி கைது !!?
கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரையைச் சேர்ந்த மகேஷ் துபாயில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார்.
அவரது மனைவி அனிஷா (வயது 33) அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி சங்கர், செல்போனிலும் நேரிலும் தொடர்ந்து மிரட்டியும் பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த அனிஷா, தனது கணவருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு, கடந்த 11-ஆம் தேதி வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இது தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சங்கரை சென்னையில் கைது செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Customize Text:
Font Color: