திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகளை முன் பதிவிற்கு கட்டாயப்படுத்திய அவல நிலை ! பயணிகள் அவதி !!?
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் மாலை சுமார் 5.00.மணி முதல் 7.00 மணிவரை வெளியூர்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளையும் அடைத்து வைத்து முன்பதிவு செய்தவர்களுக்கு என ஏமாற்றி கட்டாய முன் பதிவிற்கு மக்களைத் தள்ளிய பேருந்து நிர்வாக அதிகாரியின் அலப்பறை.

இச்செயல் தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளுடன் பயணத்திற்கு காத்திருந்த பயணிகள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் அனைத்தும் பயணத்திற்கு ஆயத்தமாகி அதன் பிறகு பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்து பயணம் செய்ய வைக்கப்பட்டது.
உறுதியுடன் போராடினால் உடனடித் தீர்வு நிச்சயம் என அங்கு வந்திருந்த சக பயணிகள் உணரும் வகையில் நிர்வாக அதிகாரிகளுடன் வாதிட்டு வெற்றி காணப்பட்டது.
இது சம்பந்தமாக அனைவரையும் ஒன்று திரட்டி நிர்வாகத்தை அம்பலப்படுத்தி உரை நிழ்த்தி முடித்து வைக்கப்பட்டது.