திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பாலியல் தொல்லை!? புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!??

by ஆசிரியர்
Reading Mode

திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பாலியல் தொல்லை!? புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!??

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (TN RIGHTS திட்டம்) பெண் களப்பணியாளர்களுக்கு எதிராக நடக்கும் தொடர் பாலியல் தொல்லைகள் அத்துமீறல் குறித்த புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை…

கடந்த ஆட்சி முதல் தொடரும் அவலம்??

புதியதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகண்டு (TN RIGHTS திட்டம்) பெண் களப்பணியாளர்களுக்கு பாதுகப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இது தொட‌ர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக தலைவர் ஈ.பி.அ.சரவணன், நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முக சுந்தரம், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சிந்து சுப்ரமணியம், 10 ரூபாய் இயக்க செயலாளர் செல்லம், ரவி, உள்ளி்ட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து வலியுறுத்திய பிறகு ஆட்சியரிடம் நேரிடையாக மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (TN RIGHTS) பெண் பணியாளரிடம் அலுவலரின் அத்து மீறல் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கடந்த ஆட்சியிலிருந்து தொடர்ச்சியாக எழுந்துள்ளன இது தொட‌ர்பாக புகாரளித்த பிறகும் கூட எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே விசாகா குழுவின் (Vishaka Committee) விசாரணைக்கும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இது தொட‌ர்பாக எங்களுடைய சங்கம் சார்பாக ஏற்கெனவே சென்னையிலுள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளருக்கும், திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் புகாரளித்த பிறகும் கூட எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.

குறிப்பாக திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (TN RIGHTS) பெண் பணியாளரிடம் அலுவலரின் அத்து மீறல் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் கடந்த ஆட்சியிலிருந்து தொடர்ச்சியாக எழுந்துள்ளன

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதல்ஸஅமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் TVK தலைவர் மதிப்புக்குரிய C.ஜோசப் விஜய் அவர்கள் பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப் பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் என தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் (TN RIGHTS) பணிபுரியும் பெண் ஊழியர்கள், தேவையற்ற உடல் ரீதியான தொடர்பு, தோற்றம் குறித்த பொருத்தமற்ற கருத்துகள் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட தொடர்ச்சியான பாலியல் தொல்லைகள் குறித்துப் புகார் அளித்துள்ளனர்.

இதனால் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசிற்கு தேவையில்லாத வீணான அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.திருப்பூர் மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நல அலுவலகத்தில் (TN RIGHTS) பணிபுரியும் சுமார் 170 பெண் களப்பணியாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யவும் விசாகா குழுவின் மூலம் உடனடி, ரகசிய விசாரணை நடத்த இந்த கடிதம் வலியுறுத்துகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் கடுமையான மீறலாகும்.

சட்டப்படி, 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு பணியிடத்திலும் விசாகா குழு (உள் புகார் குழு) இருக்க வேண்டும். இருப்பினும், 170 பெண் ஊழியர்களைக் கொண்டிருந்தும், இந்த அலுவலகத்தில் முறையான குழு இல்லை என்று கூறப்படுகிறது, இது பணியாளர்களைப் பாதுகாப்பற்ற நிலையில் வைத்துள்ளது.

தேவையற்ற தொடுதல் மற்றும் கட்டாய உடல் நெருக்கம்.ஊழியர்களைத் தனிப்பட்ட சலுகைகளுக்கு வற்புறுத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துதல்.இணங்காதவர்களுக்குப் பணிநீக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்தல்.

ஆபாசமான மொழி மற்றும் பொருத்தமற்ற படங்களைப் பகிர்தல்.திட்டத்தின் பின்னணி: உலக வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ‘TN RIGHTS’ திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய சேவைகள், பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் துன்புறுத்தல்கள் முக்கியமான களப்பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

பணியிடத்தில் பெண்களுக்கு அசௌகரியமான அல்லது தேவையற்ற சூழலை உருவாக்குவது பாலியல் துன்புறுத்தலாகும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை இக்கடிதம் மேற்கோள் காட்டுகிறது

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க சார்பாக உடனடியாக விசாகா குழுவை அமைத்து, அனைத்து 170 பெண் ஊழியர்களையும் உள்ளடக்கி ரகசியமான மற்றும் முறையான விசாரணை நடத்தவும், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக் குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00