காரைக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி ! ₹5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது !!?

by ஆசிரியர்
Reading Mode

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி ! ₹5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது !!?

விவசாய நிலத்திற்கு அடங்கல் சரி செய்து தர ரூ.5,000 லஞ்சம் – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்ததாக தகவல்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில், விவசாய நிலத்திற்கு அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் (VAO) ராஜகோபால் மற்றும் தலையாரி சாந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அடங்கல் சரி செய்து தருவதற்காக அணுகிய சக்திவேல்!

சக்திவேல் என்பவர் தனது விவசாய நிலம் தொடர்பான அடங்கல் பதிவை சரி செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது.

அப்போது இந்தப் பணியை செய்து கொடுப்பதற்காக:ரூ.5,000 லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00