கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு !!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேரை வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க சிவகங்கை மாவட்ட எஸ் பி தலைமையில் மிகச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இத்தேர் திருவிழாவில் தன் கடமையை செவ்வனே செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த காரைக்குடி தெற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் ஐபிஎஸ் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள்.


வெளிநபர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, டோக்கன் வைத்திருந்தோர் மட்டுமே வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்பட்டனர்.
தேரோட்டத்தையொட்டி, ஐஜி விஜேந்திர பிதாரி, டிஐஜிகள் மணிவண்ணன், மூர்த்தி, எஸ்பிகள் சிவபிரசாத், ரவீந்திரகுமார் குப்தா, சீனிவாச பெருமாள், அதிவீர பாண்டியன், பாண்டியராஜன் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பட்டதோடு, 4 தேரோடும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் தேர் திருவிழா வினை கண்டுகளித்து இறையருள் பெற்று சென்றனர்.

இந் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் அவர்களுக்கே உரித்தான கருட பார்வையில் கடமை தவறாது காவல் பணியை மேற்கொண்டு இத்திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுத்து பொது மக்களின் நம்பிக்கையை பெற்றனர்.
எங்கு சென்றாலும் தன் பணியை கண்ணியத்தோடு கடமை தவறாது செய்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சேகர் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் வாயிலாக வாழ்த்துகிறோம்.