யானையும் எறும்பும்!

by ஆசிரியர்
Reading Mode

ஒரு காட்டில், நான்கு எறும்புகள் நடந்து போய்க்கொண்டு இருந்தன. எதிரில் ஒரு யானை வந்தது.அதைப் பார்த்ததும்,டேய்! என்னடா இவன் நம் வழியில் வருகிறான்! கொன்று போடலாம் இவனை!”என்று கொதித் தெழுந்தது, ஓர் எறும்பு.

இரண்டாவது எறும்பு,

“சீச்சீ, சின்னப் பயலாகத் தெரிகிறான். எனவே, கொல்லவேண்டாம். அவனது நான்கு கால்களையும் உடைத்துப் போடலாம். அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும்” என்றது.

மூன்றாவது எறும்பு,

அதெல்லாம் எதற்கு? அவனைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, நாம் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கலாம் வாருங்கள்” என்றது.

நான்காவது எறும்பு

யானையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,”இது நியாயமே அல்ல.
நாம் நாலு பேர் இருக்கிறோம்.
அவன் ஒரே ஆள்.

நாலு பேர் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது நம் வீரத்துக்கும் அழகல்ல; யுத்த தர்மமும் அல்ல!
ஆகவே, அவனை மன்னித்து, இப்படி நகர்ந்து வாருங்கள்” என்றபடி ஒதுங்கிப் போனது.

நாம் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரம் உள்ளே வந்துவிட்டால்,
இந்த ‘எறும்புகளைப் போலத்தான்’
யானைகளைக்கூட துச்சமாகப் பார்ப்பீர்கள்.

விளையாட்டோ, வியாபாரமோ, அலுவலகமோ,எந்தத் துறையானாலும், அங்கு பலர் ஒன்று சேர்ந்துதான் செயலாற்ற வேண்டியுள்ளது.
சக மனிதர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து வாழுங்கள்.
மற்றவரைத் துச்சமாகப் பார்க்கும் பழக்கத்தை முதலில் விடுங்கள்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00