கிடைக்காது என நினைத்துக் கொண்டிருப்பார்கள் அது கையில் தானாக வந்த அமரும். அடேங்கப்பா! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்” என்பர்.
இப்படி ஒரு மாணவன் வாழ்வில் நடந்தது.பதஞ்சலி முனிவர் தனக்குத் தெரிந்த பாடம் மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என ஆசைப்பட்டு ஆயிரம் மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.
இவர் ஆதிசேஷன் என்ற பாம்பின் அம்சம். தனது விஷ சக்தி மாணவர்களை தாக்கி விடும் என்பதால் ஒரு திரை போட்டு மறைத்து அதற்குள் அமர்ந்து கொள்வார்.
“மாணவர்களே, யாரும் திரையை விலக்கி என்னை பார்க்க முயற்சிக்கக் கூடாது . அது போல் நான் உள்ளிருக்கும் தைரியத்தில் என் அனுமதி இன்றி யாரும் வெளியே போகவும் கூடாது” என உத்தரவு போட்டார்.
மாணவர்களும் அவ்வாறே பாடம் படித்து வந்தனர்.ஒரு குறும்புக்கார மாணவன் ஆசிரியர் திரைக்குள் மறைந்திருக்கும் ரகசியம் என்ன என பார்க்கும் ஆவலில் திரையை திறந்து விட்டான். அவ்வளவுதான் !ஆசிரியரின் விஷ பார்வையில் சிக்கி அத்தனை பேரும் கருகி விட்டனர்.
சத்தம் கேட்டு பதஞ்சலி முனிவர் ஓடோடி வந்து பார்த்தார் . பிள்ளைகள் கருகிக் கிடந்தனர். அப்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் வெளியே இருந்து உள்ளே வந்தான். பதஞ்சலி அவனை பார்த்து விட்டார் . அவருக்கு கோபம் வரவில்லை . அந்த ஒரு பிள்ளையாவது தப்பித்தானே என நினைத்து “எங்கே போனாய்?” என கேட்டார்
அவனும் வகுப்புக்கு கட் அடித்த விவரத்தை ஆசிரியரிடம் சொன்னான்.
அவனை மன்னித்த பதஞ்சலி அவனுக்கு மட்டும் பாடம் ஆரம்பித்தார்.
அவனோ சரியான மண்டு. பாடம் இவன் தலையில் ஏறாது என்பதை புரிந்து கொண்ட பதஞ்சலி, தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தி தனக்கு தெரிந்த எல்லாம் அவனுக்கும் தெரியட்டும் என்றார்.
அந்த மாணவன் ஒரே கணத்தில் ஞானி ஆகி விட்டான். இதைத்தான் யோகம் என்பார்கள். எவ்வளவு திறமை குறைந்தவனாக இருந்தாலும் கூட, நேரம் வந்துவிட்டால் எதையும் தடுக்க முடியாது.
பூர்வ ஜென்ம புண்ணியம் தான் இதற்கு காரணம்.