திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆதிராஜ் விபத்தில் மரணம்???
திருச்சி மாநகரில் விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆதிராஜ். (11.01.2026) மதியம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்ததில். கை ,கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆதிராஜ் உயிரிழந்தார். ஆதிராஜ் மாநில அளவில் சிறந்த துப்பாக்கி சுடுவதில் முதலிடத்தை தக்க வைத்திருந்தார் எஸ்.எஸ்.ஐ ஆதிராஜ். எஸ் எல் ஆர் ரக துப்பாக்கிகளை கையாண்டு இலக்கை குறிவைத்து சுடுவதில் திறமையும், வல்லமையும் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி காவல்துறைக்கும் பேரிழப்பாக உள்ளதாக காவல் துறையினர் பெரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், காவல்துறையினருக்கும், நண்பர்களுக்கும் நங்கூரம் மீடியா நெட்வொர்க் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது.
வாழ்க காவல்துறை! வளர்க காவல்துறையின் பணி!!