தூத்துக்குடி துறைமுகத்தில் பரபரப்பு!! துபாயில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 4 கோடி சிகரெட் பறிமுதல்!!

by ஆசிரியர்
Reading Mode

துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு பேரீச்சம்பழம் மத்தியில் வைத்து கடத்திய ரூபாய் 4 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து,இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது.அதில் ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ‘வெட் டேட்ஸ்’ எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப் படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது,அவை உண்மை இல்லை என்று தெரிய வந்தது.அந்த கன்டெய்னரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்கள் இருந்தன. அதற்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

அதில், 1,300 பெட் டிகளில் இருந்த 2 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 4 கோடியாகும். மேலும் ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இந்த சிகரெட்டுகள் யாருக்காக கடத்தி வரப்பட்டன? அதனை இறக்குமதி செய்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியா விலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3 லட்சம் சிகரெட்டுகள் பிடிபட்டிருந்தன. இந்நிலையில் தற்போது ரூபாய் 4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் பிடிபட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00