வத்தலகுண்டு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நால்வர் கைது, 400 லாட்டரி சீட்டுகள், 5 செல்போன்கள், 5000/- பணம் பறிமுதல்.
திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காட்டாஸ்பத்திரி எதிரே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வினோத்குமார்(வயது 29), விக்னேஸ்வரன்(வயது 33), நசீர்(வயது38), கமலேஸ்வரன்(வயது 19) ஆகிய நால்வர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 400 லாட்டரி சீட்டுகள், 5 செல்போன்கள், 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் லாட்டரி சீட்டுகளை தேனி, மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.