பள்ளி செல்வதை தவிர்த்த மாணவனின் மனநிலையை மாற்றி மாணவன் பள்ளி செல்வதை உறுதி செய்த டாக்டர்.R. ஸ்டாலின் அவர்களின் நிமிர் (The Rising Team)
கன்னியாகுமரி மாவட்டம் – திருவட்டார் பகுதியை சேர்ந்த ஏழாவது வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் அவர்களின் நிமிர் (The Rising Team) குழுவினர்,
அவரின் வீட்டிற்கே சென்று மாணவனை தனியாக அழைத்து விசாரித்ததில் பெரியவர்களுடன் சேர்ந்து மீன்பிடிக்க செல்வதும், விளையாட செல்வதும், வீட்டில் ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டனர்.

அந்த மாணவனுக்கு இளம் வயதில் கற்கும் கல்வியின் பலனை எடுத்து கூறி, அறிவுரைகளை வழங்கி அச்சிறுவன் படித்து வந்த பள்ளியில் சேர்த்து விட்டனர்.
மேலும் சிறுவர் / சிறுமியர்களை பாதுகாக்கும் நிமிர் குழுவை உருவாக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஊர்மக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.