மது போதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்களுக்கு அபராதம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு ஏராளமான ஆம்னி பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் போக்குவரத்து போலீசார் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர்.
அப்போது மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டிய இரண்டு தனியார் ஆம்னி பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர்.