குமரி காவல்துறையின் வெற்றிப்பாதையில், சார்பு ஆய்வாளர் மாதிரி தேர்வு பயிற்சி வகுப்பு.

by ஆசிரியர்
Reading Mode

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பணிக்கு வந்த நாளிலிருந்து பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலவிதமான அமைப்புகளை உருவாக்கி சட்டம், ஒழுங்கை கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வரும் நிலையில்,இளைஞர்கள் போதை போன்ற தவறான பாதையை விட்டு சரியான பாதையை வழிகாட்டும் பொருட்டும் காவல்துறை பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் முன்னெடுப்பான வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான 13ஆவது மாதிரி தேர்வு மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.இந்த மாதிரி தேர்வுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் .

காலை 10:00 மணி முதல் 12:20 மணி வரை நடந்த இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விடைத்தாள் கொடுக்கப்பட்டு விடைகள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் (பயிற்சி) திரு. இளம் செழியன் அவர்களால் பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இந்த மாதிரி தேர்வானது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் இதில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தேர்வர்களும் கலந்து கொள்ளலாம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00