குமரி  மாவட்ட  காவல்துறை  கடும்  நடவடிக்கை ! போலி  பணி  ஆணைகளில்  ஈடுபட்ட  பண  மோசடி  கும்பல்  கூண்டோடு  கைது!!

by ஆசிரியர்
Reading Mode

ஆய்வக உதவியாளர்,
அலுவலக அட்மின் வேலை என அண்ணா பல்கலைக்கழக பணி ஆணைகளை போலியாக தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களை குமரி மாவட்ட அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் நாகராஜன் என்பவர் அளித்த புகாரில், மாதவலாயம் அனந்த பத்மனாபபுரம் ஊரை சேர்ந்த இருவர் ஆசிரியர் அல்லாத பணியாளர் வேலைக்கான பணியில் சேர பணி நியமன ஆணைகளை கொண்டு வந்ததாகவும். இந்தப் பணி ஆணையில் அலுவலக முத்திரைகளும் கையெழுத்தும் போலியாக இருந்தது எனவும், மேற்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சி செய்தது குறித்தும், போலி பணி ஆணைகள் குறித்தும், அதில் எங்கள் அலுவலக முத்திரைகள் மற்றும் எனது கையெழுத்தை போலியாக தயார் செய்து பயன்படுத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டது. புகாருக்கு ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலியான பணி ஆணை மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் உத்தரவிட்டார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் ஐபிஎஸ் மேற்பார்வையில்,உதவி ஆய்வாளர் திருமதி.ஜெசிமேனகா   தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 5 வது குருக்கு வீதிப் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார்(வயது50),

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சஞ்சிவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில்(வயது51) மற்றும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு(வயது42) ஆகியோர் பணி ஆணை மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.அவர்கள் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இக்கட்டத்திற்காக பயன்படுத்திய கம்ப்யூட்டர், போலி பணி நியமன ஆணைகள், அண்ணா பல்கலைக்கழக மற்றும் கோணம் அரசு பொறியியல் கல்லூரி முத்திரைகள் கைப்பற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து, இதுபோல் வேறு எங்கும் இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்துள்ளார்களா என்று காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00