தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கன்னியாகுமரி காவல் துறையினரால் கைது.9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக பெரியவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 49) என்பவர் புகார் அளித்திருந்தார். இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS உத்தரவிட்டிருந்தார்கள்.

இந்த உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசங்கரன் மேற்பார்வையில் , ஆய்வாளர் திருமதி. சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த முகமது ஹனிபா என்பவரின் மகன் பீர்முகமது (வயது 33) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.