42
Reading Mode
அண்டை மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு சட்ட விரோத மதுபானங்கள் விற்பனை,கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற வண்ணம் தமிழக காவல்துறை பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, (22.08.2025) நாளன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 300 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பிரபு (வயது 40) கைது செய்யப்பட்டார்.
Customize Text:
Font Color: