கோவை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், ‘SMART KAKKI’S’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், அன்னூர் காவல் நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தாமோதரன் (PC 968) மற்றும் கோவிந்தராஜ் (HG 140) ஆகியோர், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய முருகேசன் (வயது36) என்பவரை கைது செய்தனர்.
அவர்களின் துரித நடவடிக்கையைப் பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.